ஸ்ருதிஹாசனின் குரலில் உருவான பவழ மல்லி பாடல்
தற்போதைய இளைஞர்கள் பெரிதும் கொண்டாடும் இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “பவழ மல்லி” பாடல் தற்போது இசை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடல் பாரம்பரியத்தின் மணமும், நவீன இசையின் அதிரடியும் ஒன்றாக கலந்த தனித்துவமான இசை அனுபவமாக உருவாகியுள்ளது. இண்டி இசை உலகில் தனித்துவமான பாணிக்காக அறியப்படும் சாய் அபயங்கர் இந்த பாடலுக்கு இசை மைத்துள்ளார். ஸ்ருதிஹாசனின் குரல் இந்த பாடலுக்கு ஒரு தனித்துவமான கவர்ச்சியையும் ஆழமான உணர்ச்சி யையும் அளிக்கிறது. மணமகன்–மணமகள் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான ஊடலை மையமாகக் கொண்டு, கேள்வி–பதில் பாணியில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மணமகளின் பதில்கள் அவரின் குரலில் இனிமையாக ஒலித்து பாடலுக்கு மேலும் உயிரூட்டுகி ன்றன.இந்த பாடலின் வரிகளை கவிஞர் விவேக் எழுதியுள்ளார்.