ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படம் தொடக்கம்
‘கருடன்’, ‘மாமன்’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ், அடுத்ததாக ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தை தயாரிக்கின்றனர். சமீபத்தில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜீவா மீண்டும் மதுரை மண்ணின் மைந்தராக நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். இப்படத்தை ‘கிடா’ படத்தை இயக்கிய ரா. வெங்கட் இயக்குகிறார். மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம் அப்பா, மகன் உறவின் ஆழமான பாசம், குடும்ப உறவுகளின் வலிமை மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகிறது. இதன் படப்பிடிப்பு மதுரையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.