என் 17 ஆண்டு திரை பயணத்தில் நான் கற்ற பாடம்… ஸ்ருதிஹாசன் பெருமிதம்

என் 17 ஆண்டு திரை பயணத்தில் நான் கற்ற பாடம்… ஸ்ருதிஹாசன் பெருமிதம்
நடிகை ஸ்ருதிஹாசன் திரை உலகில் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவர் அளித்த பேட்டியில் கூறியது,17 ஆண்டு திரைப் பயணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங் களை வழங்கி உள்ளது. நிறைய விஷயங்க ளை கற்றுக்கொடுத்துள்ளது.ஒரு படத்தின் வெற்றியோ, தோல்வியோ முக்கியமல்ல. ஒரு நல்ல படைப்பு உருவாக அதன் பின்னால் உள்ள குழுவின் உழைப்பும், அர்ப்பணிப்பும் இருப்பதை இந்த பயணம் எனக்கு உணர்த்தி உள்ளது. திரை உலகில் நீண்ட காலம் நிலைத்து நிற்பதற்கு திறமை மட்டுமல்ல, மனஉறுதியும் அவசியம். எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் முன்னேற வேண்டும் என்ற மனப்பக்குவத் தை திரை உலகம் எனக்கு வழங்கிய மிகப் பெரிய பாடமாக கருதுகிறேன் என்றார்.

Comments (0)
Add Comment