ஓம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை ரிலீஸ்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ஓம். இந்த படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீ லீலா ஆகியோர் ஹீரோயினாக நடித்த வருகின்றனர். சாய் அபயங்கர் இசை அமைத்துள்ள இந்த படத்தை வொண்டர் பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது இந்த நிலையில் படத்தின் முதல் பாடலை நாளை வெளியிட உள்ளதாக புதிய போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் ஏற்கனவே மாரி படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு ஆடிய நடனம் ஹிட்டானது. தற்போது சாய் அபயங்கர் இசையில் அவர்கள் மீண்டும் இணைந்திருப்பது எதிர்பார்பை எகிற வைத்துள்ளது.