ஐமேக்ஸ் பிலிம் கேமராவில் உருவான முதல் படம் “தி ஒடிஸி”

ஐமேக்ஸ் பிலிம் கேமராவில் உருவான முதல் படம் “தி ஒடிஸி”
கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’ என்பது முற்றிலும் புதிய ஐமேக்ஸ் பிலிம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் படமாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அதிரடி புராணக் காவியமாகும். முழுமையாக ஐமேக்ஸ் பிலிம் கேமராக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் முழுநீளத் திரைப்படம் என்ற பெருமையுடன், ஹோமரின் புகழ்பெற்ற கிரேக்க காவியமான ‘ஒடிஸி’யை, இப்படம் உலகளாவிய திரைகளுக்குக் கொண்டு வருகிறது. நோலனின் முந்தைய படங்களா ன ‘தி டார்க் நைட்’, ‘இன்செப்ஷன்’, ‘இன்டர் ஸ்டெல்லார்’, ‘டன்கிர்க்’, ‘ஓப்பன்ஹைமர்’ போன்ற படங்களைத் தொடர்ந்து, இது அவரின் 13 வது படமாக உருவாகியுள்ளது.

Comments (0)
Add Comment