அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் இருக்க கூடாது!

அரசு திட்டத்தில்
முதல்வர் பெயர்
இருக்க கூடாது!

திமுக அரசுக்கு
குட்டு வைத்த ஹைகோர்ட்

தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வரின் பெயர் இடபெறக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக MP CV சண்முகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதல்வரின் புகைப்படத்தை பயன்படுத்தலாம். ஆனால், கட்சியின் தலைவர் படத்தையோ, முன்னாள் முதல்வரின் படத்தையோ உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

அரசு திட்டத்தின் பெயரில் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், ஆளும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

அதனால் தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வர் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

அரசு நலத்திட்டம் தொடங்குவது குறித்தோ, அதனை செயல்படுத்துவது குறித்தோ எந்த உத்தரவையும் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை என தலைமை நீதிபதி தெளிவுபடுத்தினார்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வர் பெயர் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி அதிமுக அளித்த புகாரை தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது தலைமை நீதிபதி தெளிவுபடுத்தினார்.

மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தள்ளிவைத்தார்.

Comments (0)
Add Comment