சென்னை: பள்ளிக் கல்விக்கு என்று தனியாக மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; பள்ளிக்கல்வி வரலாற்றில் இது மிகவும் சிறப்புவாய்ந்த விழாவாகும். மாணவர்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்கிறேன். அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம். இருமொழிக் கொள்கையே எங்கள் உறுதியான கொள்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டு முதல்வர் உரை
“பள்ளிக்கல்வி வரலாற்றில் இது சிறப்பு விழா, எந்த மாநிலத்திலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா எடுக்கப்படுவதில்லை
இந்த வயதில் என்ஜாயும் பண்ணலாம், நன்றாக படித்து சாதிக்கவும் செய்யலாம்
பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் பார்த்தால் புது எனர்ஜி வந்து விடுகிறது
இந்த ஆண்டு 75% மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர், இது 100%-ஆக உயர வேண்டும்
நீங்கள் தான் ரியல் ஹீரோ…
உங்களை தூக்கி வைத்து
கொண்டாட நாங்கள்
தயாராக இருக்கிறோம்
தமிழகத்திற்கு என்று தனி சிந்தனை உள்ளது, சிந்தித்து செயல்படும் வகையில் கல்வி திட்டம் உருவாக்கம்”
– முதல்வர் ஸ்டாலின்