25ம்ஆண்டு 25ம் தேதியில் 25 வது படம் ரிலீஸ்

25ம்ஆண்டு 25ம் தேதியில் 25 வது படம் ரிலீஸ்

வெள்ளிவிழா படம் குறித்து மனம் திறந்த விக்ரம் பிரபு
சிம்ம குரலோன் சிவாஜி கணேசனின் பேரன், இளைய திலகம் பிரபுவின் மகன் என்ற அடையாளத்துடன் கும்கி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு. முதல் படமே அவருக்கு வெற்றியை தேடி தந்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தன்னை ஒரு முன்னணி நடிகராக நிலை நிறுத்திக் கொண்டார். சினிமாவில் அடி எடுத்து வைத்து இவர் 13 ஆண்டுகளில் 25 படங்களை நிறைவு செய்துள்ளார். அவர் நடித்துள்ள சிறை படம் 25 ஆவது படம் ஆகும். 2025ம் ஆண்டில், வரும் 25 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆவது கூடுதல் சிறப்பு. இந்த மகிழ்ச்சிகரமான வேலையில் தனது வெள்ளி விழா படம் குறித்து நடிகர் விக்ரம் பிரபு பேட்டி அளித்தார் .
கேள்வி : 25 படங்களை நிறைவு செய்தது எப்படி உள்ளது?
பதில் : சிறை படம் 25 வது படம் என்பதே, நலம் விரும்பி ஒருவர் சொல்லி தான் தெரிந்தது. ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. நான் சினிமாவுக்கு வந்து 13 ஆண்டுகளில் 25 படங்கள் என்பது நிறைவாக உள்ளது. இதில் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். பல விஷயங்களை கடந்து வந்தேன்,இன்னும் கடக்க வேண்டிய தூரம் உள்ளது.
கேள்வி : சிறை படத்தில் மீண்டும் போலீசாக நடித்தது ஏன்?
பதில் : டாணாகரன் படத்துக்கு பிறகு நிறைய போலீஸ் கதைகள் தேடி வந்தது. அதையெல்லாம் தவிர்த்து விட்டு இதில் நடித்ததற்கு காரணம். இந்த கதை நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய சுவையாக இருக்கும். ஒரு நிஜ கதையை இயக்குனர் தமிழ் அழகாக எழுதியிருந்தார். அதை இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி அழகாக எடுத்துள்ளார்.
கேள்வி : 25வது படத்தை ஒரு அறிமுக இயக்குனரிடம் கொடுத்தது ஏன்?
பதில்: இயக்குனர் தமிழ் ஒரு போலீஸ் ஸ்டோரி இருக்கு என்று சொன்னவுடன் மீண்டும் போலீஸ் தேவையா என கேட்டேன். ஆனால் இந்த கதையை கேட்டவுடன் நடிக்க முடிவு செய்தேன். அதிலும் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி மிகவும் திறமைசாலி. அதிகம் பேச மாட்டார். இயக்குனர் வெற்றிமாறனிடம் பல படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர். அவர் கதையை என்னிடம் விவரித்தவுடன் நடிக்க ஓகே சொன்னேன். அவருக்கு இது முதல் படம் என்றாலும் அவரிடம் திறமை இருக்கிறது.

கேள்வி : லவ் மேரேஜ் உள்ளிட்ட உங்களின் ஒரு சில படங்கள் காலதாமதம் ஆனது எதனால்?
பதில் : ஒரு நடிகனாக எனது பணியை நான் சரியாக செய்து விடுவேன். இதுவரை நான் படப்பிடிப்புக்கு வரவில்லை. டப்பிங் பேசவில்லை. காலதாமதம் செய்கிறேன் என எந்த புகார் எந்த ஒரு தயாரிப்பாளரும், இயக்குனரும் சொன்னதில்லை. அதையும் மீறி ஒரு சில படங்கள் காலதாமதம் ஆகிறது என்றால், அதற்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. நிச்சயமாக நான் காரணமில்லை. அதேபோல் நான் யார் மீதும் குறையும் கூற விரும்பவில்லை.
கேள்வி : கும்கி 2 படத்தில் நீங்கள் நடிக்காதது ஏன்?
பதில் : இந்த படம் ஆறாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அதில் பிரபு சாலமன் உறவினர் நடிக்க இருப்பதாக சொன்னார்கள். என்னை நடிப்பதற்கு அணுகவும் இல்லை. அழைக்கவும் இல்லை.
கேள்வி: அனுஷ்காவுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில் : காட்டி படம் ஒரு அழகான அனுபவம். அனுஷ்கா பழகுவதற்கு இனிமையானவர். மூத்த நடிகையாக இருந்தாலும் எந்தவித ஈகோவும் இல்லாமல் என்னிடம் பழகினார். இப்பொழுதும் நாங்கள் நட்போடு பழ விஷயங்களை ஷேர் செய்து வருகிறோம் .
கேள்வி : ஆதிக் ரவிச்சந்திரன் உங்கள்
தங்கையின் கணவர். அடுத்த அஜித் படத்தில் உங்களுக்கு வாய்ப்பு
தருவாரா?
பதில் :அவர் பெரிய அஜித் வெறியர்.அவரை
வைத்து படம் எடுக்கிறார். நான் என்றுமே அதில்
இருக்க வேண்டும் என்று கேட்டதே இல்லை. குட் பேட் அக்லி பட கூட
கதையை என்னிடம்
சொல்லாதீங்க நான் படம் பார்த்து விடுகிறேன் என
சொன்னேன். அதற்கு அவர் நீங்கள் கேட்டாலும் சொல்ல மாட்டேன் என என்னிடம் சொல்லி விட்டார். அஜித்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றார்.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள “சிறை” படத்தில் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வரும் 25ஆம் தேதி ரிலீசாகிறது.

*அஜித் படத்தில் நடிக்க ஆவலாக உள்ளேன்: விக்ரம் பிரபு ஓபன் டாக்*
கே. விஜய் ஆனந்த்

Comments (0)
Add Comment