தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” -முதலமைச்சர்

தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” -முதலமைச்சர்

“கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17% நிதியை மட்டுமே ஒன்றிய அரசு அளித்துள்ளது. ரூ.24,670 கோடி நிதி கேட்டதில் ரூ.4,130 கோடியை மட்டுமே கொடுத்துள்ளது.

எத்தனையோ பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வென்றுள்ளது. அதேபோல் காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“நமது அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றொரு கண்.

பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை காலநிலை கல்வி அறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். 297 பசுமை பள்ளிகளில் Cool Roofing திட்டம் செயல்படுத்தப்படும்”

Comments (0)
Add Comment