தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்

தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர் உள்ளிட்ட மூன்று வன உயிரியில் பூங்காக்களில்
கட்டணம் இல்லாமல் பார்வையிடலாம் சென்னை கோட்டையில் தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல் அமைச்சருமான சி ஜோசப் விஜய் அவர்களின் 22-ம் தேதி 52-வது பிறந்தநாளை முன்னிட்டு கோட்டையில் மரம் நடப்படும் வனத்துறை அமைச்சர் ஆர்வி ரஞ்சித்குமார் அறிவிப்பு  வருகிற 21-ம் தேதி ஞாயிறு 22-ம் தேதி திங்கள் ஆகிய இரண்டுநாட்கள் சென்னையை டுத்த
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்துள்ள வண்டலூரிலுள்ள
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வேலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தி சேலம் குரும் பட்டியிலுள்ள வன உயிரியல் பூங்காக்களில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கட்டணமில்லாமல் பார்வையிடலாம்கிண்டி காந்தி மண்டபத்திலுள்ள பூங்கா சிறிய பூங்கா அங்கு அனுமதித்தால் கூட்டம் அளவு அதிகமாக கூடி விடுவார்கள் எனவே மூன்று பூங்காக்கள் மட்டும் அனுமதிக்க படுவார்கள்
இதற்காண அனுமதி சீட்டை ஆன்லையில் பதிவு செய்யலாம் இதற்கான கட்டண பணத்தை எங்கள் குடும்ப அறக்கட்டளை வாழ் முனி நாயக்கர் அறக்கட்டளை செலுத்தும் இதற்கான இரண்டு நாள் கட்டணம் ஏறக்குறைய ரூபாய் 70 லட்சம் வரும் எங்கள் ஆட்சி வருவதற்கு குழந்தைகள் காரணம்
அவர்கள் தெய்வங்கள் எனவே முதலமைச்சர் பிறந்தநாளை குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கொண்டாட்டும் என்று ஏற்பாடு செய்துள்ளோம் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு
22-ம் தேதி காஞ்சிபுரத்தில் வனத்துறை சார்பில் 52 ஆயிரம் மரகன்றுகள் நடவுள்ளோம் அன்று தலைமை செயலாகத்திலும் மரம் நடவுள்ளோம் இடத்தை தேர்வு செய்து வருகிறோம் இவ்வாறு அமைச்சர் ஆர்வி ரஞ்சித்குமார் கூறினார்

Comments (0)
Add Comment