தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்கள் பல செயல்படுத்தப்படுகின்றன; சிங்கப்பெண் திட்டத்திற்கான நிதி மூலதன செலவில்தான் வருகிறதா?
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை நிறுத்துவதற்கு பணி நடக்கிறது; பரந்தூர் விமானநிலையம், உத்தண்டி சாலை உள்ளிட்ட பணிகளை நிறுத்தியுள்ளார்கள்.”நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.6 லட்சம் கோடி தேவைப்படும். உங்கள் ஆட்சி முடிவில் அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதையும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். அப்போது என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதையும் பார்க்கத்தான் போகிறோம்.அரசு கடன் வாங்குவது தவறு அல்ல, அந்தக் கடனை எப்படி மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்”.”பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்பட தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் மூலதன திட்டங்களை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு, திமுக அரசு மூலதன திட்டங்களுக்காக செலவிடவில்லை எனக் கூறுகிறது தவெக அரசு.காலை உணவுத் திட்டம் போன்ற தமிழ்நாட்டில் உள்ள பல மக்கள் நலத் திட்டங்கள் குஜராத்தில் கிடையாது”
– முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு