அம்மா ஆவதை கன்பார்ம் செய்த சமந்தா

அம்மா ஆவதை கன்பார்ம் செய்த சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2025 ஆம் ஆண்டு பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து, தனது கணவரான ராஜ் நிடிமோரு கதை எழுதி, சமந்தா நடித்து வெளியான படம் ”மா இண்டி பங்காரம்”. இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.இந்த நிலையில், “மா இண்டி பங்காரம்” படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா தான் தாயாகப்போவதை உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறியது,“நான் ஒரு சிறிய இடைவேளை எடுக்க வேண்டும். அதன் பிறகு நான் மீண்டும் நடிக்க வந்துவிடுவேன். நான் மகப்பேறு விடுமுறை எடுக்க வேண்டு மென எனக்குத் தெரியும்.” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment