ராஷ்மிகா கல்யாணத்துக்கு நெதர்லாந்து நாட்டு ரோஜா பூக்கள் வருதாம்..!!
நடிகை ராஷ்மிகா மந்தனாவும்,நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபரில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் நேரடியாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அவர்கள் திருமணம் அடுத்த மாதம் 22-ம் தேதி உதய்பூரில் நடைபெற இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே நடிகை ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், “கடந்த 4 ஆண்டுகளாக இந்த செய்தி ஓடிக்கொண்டே இருக்கிறது. அதை எப்போது பேச வேண்டுமோ அப்போது பேசுவேன்” என்று தனது காதல் மற்றும் திருமணம் பற்றிக் கூறியிருந்தார். இதற்கு நடுவே இவர்கள் திருமணத்துக்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய இருக்கின்றனர். இதற்கான ஆர்டர் ஒரு மாதத்துக்கு முன்பே செய்யப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.