‘ரெட்ட தல’ பட ரகசியம் சொல்லும் அருண் விஜய்

டபுள் ஆக்சனில் நடித்தது சவாலாக இருந்தது

‘ரெட்ட தல’ பட ரகசியம் சொல்லும் அருண் விஜய்

ரெட்ட தல’ படத்தில் நான் ஹீரோவா? வில்லனா?: அருண் விஜய் ஓபன் டாக்

சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘ரெட்ட தல’. இதில் அருண் விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக
சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். வில்லன் கேரக்டரில் ஹரீஷ்பெராடி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் மிரட்டி உள்ளனர்.
சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ளார்.
இந்த
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் வெளியிடப் பட்டது. ரசிகர்கள் மத்தியில் டிரெய்லர் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படம் பற்றி நடிகர் அருண் விஜய்
அளித்த பேட்டி வருமாறு:- இந்த படம் ஒரு ஆக்ஷன், திரில்லர்,பொழுதுபோக்கு ஜனரில் உருவாகியுள்ளது. இந்த படத்துக்காக நான்கு கெட் அப் போட வேண்டியதிருந்தது. இது எனது கேரியரில் முற்றிலும் மாறுபட்ட கேரக்டர். ஒரே தோற்றத்தில் இருக்கும் இரண்டு பேரை, வேறு மாதிரி காட்டி இருக்கிறோம். அதற்காக பல நாட்கள் படப்பிடிப்பில் இரண்டு கேட்டர்களும் மாறி மாறி நடிக்க வேண்டி இருந்தது. அதை கஷ்டமாக நினைக்காமல் ரசித்து நடித்தேன்.
எல்லாருக்குள்ளும் நல்ல பக்கமும் இருக்கும். கெட்ட பக்கமும் இருக்கும். 2 பக்கங்களும் வெளியில் எட்டி பார்த்தால் என்னாகும் என்பது தான் கதை. இதில்
கண்ணம்மா என்ற பாடலை தனுஷ் பாடியுள்ளார். அந்த பாடலில் அவரை பாட வைக்க வேண்டும் என்பதற்காக சாம்.சி.எஸ். தானே பாடலை எழுதி,தனுஷ் குரலில் பாடி அவரை கேட்க வைத்தார்.பாடலை கேட்ட தனுஷ்,‘பாடியது யார்’ என கேட்டார். அதற்கு ஏ ஐ மூலம் நான் தான் உங்கள் குரலில் பாடியுள்ளேன் என்றார். அப்படியா என ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு ரொம்ப நல்லா இருக்கு, நானே பாடி தருகிறேன் என கூறி பாடலை பாடினார். இந்த பாடல் காட்சி மலேசியா நாட்டில் மலாக்காவில் படமாக்கப்பட்டுள்ளது. பாடலுக்காக தனுஷ் சம்பளம் கூட வாங்கவில்லை. அதேபோல் விவேகா வரிகளில் ‘கண்டாரக் கொல்லி’ என்ற பாடலை ரொம்ப எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.இதில் டபுள் ஆக்சன் என்றாலும் ஹீரோ, வில்லன் என்பது கிடையாது. சூழ்நிலை தான் அவர்களை ஹீரோவாகவும் வில்லனாகவும் மாற்றுகிறது. காளி, உபேந்திரா என இரண்டு கேரக்டர்களுக்கும் என்னால் முடிந்த அளவு நியாயம் சேர்த்துள்ளேன்.இந்த இரண்டு கேரக்டரை இயக்குனர் வடிவமைத்ததே சவால் தான்.2 கேரக்டருக்குமே நடிப்பதற்கு மிகவும் சவாலாக இருந்தது. சில காட்சிகளில் 2 பேரும் ஒன்றாக இருப்பது போல் அமைந்து விடும். படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிக அளவில் இருக்கிறது. அதனால் படத்தில் முத்தக்காட்சிகள் இல்லை,அதே நேரம் கொஞ்சம் ரொமான்ஸ் இருக்கிறது.
பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன் படத்தை எடுக்க சம்மதித்தார். படத்தை விரைவாக ரசிகர்களுக்கு கொடுக்க தயாரிப்பாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அடுத்த படமும் வழக்கம் போல் இல்லாமல் வேற மாதிரி ஜானரில் நடிக்க இருக்கிறேன் என்றார்.

Comments (0)
Add Comment