மழையால் தாமதமான இந்தியா – ஆப்கானிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி!

மழையால் தாமதமான இந்தியா – ஆப்கானிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, தர்மசாலாவில் நடைபெற இருந்த நிலையில் தொடர் மழை காரணமாக தாமதமாகியுள்ளது.

போட்டி நடைபெறும் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆட்டம் திட்டமிட்ட நேரத்தில் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மழை நின்று மைதானம் விளையாட ஏற்ற நிலையில் வந்த பிறகே போட்டி தொடங்குவது குறித்து நடுவர்கள் முடிவு எடுக்க உள்ளனர்.

இதனால் போட்டிக்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மழை குறைந்து விரைவில் ஆட்டம் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Comments (0)
Add Comment