வெற்றிவேல் வீரவேல் எனக் கூறி மதுரையில் உரையாற்றிய பிரதமர் மோடி

வெற்றிவேல் வீரவேல் எனக் கூறி மதுரையில் உரையாற்றிய பிரதமர் மோடி

மதுரையில் என்டிஏ பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசத் தொடங்குவதற்கு முன்பு வெற்றிவேல் வீரவேல் எனக் கூறினார். கூடியிருந்த தொண்டர்கள் வீரவேல் என முழங்கினர்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறினார். மதுரை மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தலை தாழ்ந்து வணங்குகின்றேன் எனக் குறிப்பிட்டுப் பேசத் தொடங்கினார் பிரதமர் மோடி.

இது பாண்டிய நாடு. வீரம் விளைந்த பூமி. இந்த மகத்தான பூமியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மாவீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோரின் வியப்பை ஏற்படுத்தும் தியாகங்களை நினைவு கூர்கிறேன்.

நீதிக்கும் கண்ணியத்துக்கும் போராடிய இமானுவேல் சேகரனையும் நினைவு கூர்கிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Comments (0)
Add Comment