புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர்.சி போட்டி!
இரட்டை இலை சின்னத்தில் போட்டி.
புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர்.சி போட்டி!
புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதியில் பிரபல நடிகரும் இயக்குநருமான சுந்தர். சி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தற்போது பிரதிநிதித்துவம் செய்யும் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி. களமிறங்குவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா பிரபலமான சுந்தர். சி. அரசியலுக்குள் வருவது, குறிப்பாக வலுவான வேட்பாளரான பி.டி.ஆர்.க்கு எதிராக போட்டியிடுவது, தேர்தல் சூழ்நிலையை மேலும் சூடுபிடிக்கச் செய்யும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.