நிதி அகர்வால் கலகலப்பு.. பேட்டி

துணை முதல்வர்கள் ஆன உதயநிதி, பவன் கல்யாண்
எனது அதிர்ஷ்டத்தால் பிரபாஸ் ஜனாதிபதி ஆவார்!!
நிதி அகர்வால் கலகலப்பு.. பேட்டி

தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் நிதி அகர்வால். ஏற்கனவே தமிழில் பூமி, ஈஸ்வரன், கலகத்தலைவன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இருப்பினும் நிதி அகர்வால் நடித்த பல படங்கள் தோல்வி அடைந்துள்ளது, பெரிய வசூலை பெறவில்லை என்ற கருத்தை ரசிகர்கள் கூறுவதை மறுக்க முடியாது. இருந்தாலும் இந்த பொண்ணு முயற்சி செய்கிறார். ஓடுவதற்கு முன்னாடி ஓட விடாம தள்ளாதீங்க என ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு நடிகை பிரபலமாக இருந்தால் டிரோல் கண்டிப்பாக வரும். நிதி அகர்வாலுக்கு அதுவும் நடந்தது. ஆனால் அதைக் கண்டு பயந்து ஓடவில்லை. சினிமாவை விட்டு விலகவில்லை. எனக்கு என் சினிமா முக்கியம் என தைரியதோடு இருந்தார். இருப்பினும் ஒரு சிலர் இவரை ராசி இல்லாத நடிகை என்ற குற்றச்சாட்டை கூறுகின்றனர். அப்படி சொல்பவர்களுக்கு நடிகை ஸ்ரீநிதி அகர்வால் அளிக்கும் பதில் வருமாறு:- கலகத்தலைவன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்தேன். அவர் தற்போது தமிழகத்தில் துணை முதலமைச்சராகி விட்டார். பவன் கல்யானுடன் ஹரிஹர வீரமல்லு படத்தில் நடித்தேன். பவன் கல்யாண் ஆந்திர துணை முதல்வராக பொறுப்பேற்றார்.இப்போது பிரபாசுக்கு ஜோடியாக தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்துள்ளேன். இந்த படம் மகர சங்கராந்தியை ஒட்டி உலகம் முழுவதும் கடந்த 9ம் தேதி வெளியாகி உள்ளது. இதில், பிரபாசுடன் இணைந்து நடித்திருப்பதால் அவரும் இது போன்று உயர்ந்த பதவிக்கு வருவாரா? என்று என்னிடம் கேட்கிறார்கள். பிரபாஸ் ஜனாதிபதி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என தமாசாக கூறிவிட்டு சிரித்தார். பாகுபலி, கல்கி படத்தை போல தி ராஜா சாப் படம் ரூ.1000 கோடியை வசூலிக்கும் என நினைக்கிறேன். ‘பேய்’ படம் என்றால் எனக்கு ரொம்ப பயம் என்றார்.

Comments (0)
Add Comment