முதல்வர் விஜய்யிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் ரமேஷ்

முதல்வர் விஜய்யிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் ரமேஷ்
சென்னை ஆகஸ்ட் 1: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை, இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ், தனது பிறந்த நாளை ஒட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதல்வரின் திருவுருவ சிலையை அவருக்கு பரிசாக வழங்கி ஆசி பெற்றார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் அமைச்சர் ரமேஷ் பதிவிட்டுள்ளது வருமாறு,இன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் எனது ஆருயிர் தலைவர் அவர்களை நேரில் சந்திந்து ஆசிகளும் வாழ்த்துகளும் பெற்றேன்.காலம் உள்ளவரை இந்த வாழ்வை எனக்களித்த தளபதி அவர்களுக்கும், திருவரங்கம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கும், தமிழ் மண்ணிற்கும் நேர்மையாக உண்மையாக உழைப்பேன்! என பதிவிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment