மலேசியா டூ சென்னை: நம்பிக்கை பயணம்
மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அமைச்சர் அன்பில் மகேஷ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காதர் மொய்தீன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள்,சரத்குமார்,ராதிகா சரத்குமார்,நாசர் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.