ஆகஸ்ட் 7ல் மாதவனின் ‘ஜி.டி.என்.’ படம் ரிலீஸ் :

ஆகஸ்ட் 7ல் மாதவனின் ‘ஜி.டி.என்.’ படம் ரிலீஸ் :
நடிகர் ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாள ரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை மற்றும் சாதனையை மையமாகக் கொண்டு ‘ஜி.டி.என்.’ படம் உருவாகியுள்ளது. இதில் ஜி.டி. நாயுடுவாக ஆர்.மாதவன் நடித்துள்ளார். இந்த படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment