பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கயாடு லோஹர்
பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர். தற்போது இதயம் முரளி, மஞ்சணத்தி, இம்மோர்டல் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். நேற்று அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அறிமுக இயக்குநர் மரியப்பா சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் அவர் இணைந்து நடித்துள்ள இம்மார்டல் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கி உள்ள இரண்டாம் வானம் படத்திலிருந்து புதிய போஸ்டரை வெளியிட்டு பட குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் சமூக ஊடகங்களில் இருந்து சில காலம் விலகி இருக்கப் போவதாக கயாடு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், “சமூக ஊடகங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போகிறேன். சில நேரங்களில், நம் உடலுக்குக் கொடுக்கும் அதே வகையான ஓய்வு மனதுக்கும் தேவைப்படுகிறது. அதனால் சில காலம் திரைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையுடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.