கைதி 2 படம் கன்பார்ம்: ரூமர்களுக்கு புல் ஸ்டாப் வைத்த லோகேஷ்
ரஜினியின் கூலி படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கைதி 2’ படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அவர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இதனால் கைதி படம் கைவிடப் பட்டதாக செய்திகள் வெளியானது.இந்நிலையில்,நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய லோகேஷ் கனகராஜ், “நான் அதிக சம்பளம் கேட்டதால் ‘கைதி 2’ படத்திலிருந்து விலகி விட்டதாகச் சிலர் சொல்கிறார்கள், மேலும் சிலர் ‘சினிமாடிக் யுனிவர்ஸ்’ முடிந்துவிட்ட தாகவும் சொல்கிறார்கள். அல்லு அர்ஜுன் சார் படத்திற்கு பிறகு எனது அடுத்த படம் ‘கைதி 2’ தான். ‘விக்ரம் 2’ மற்றும் ‘ரோலக்ஸ்’ ஆகிய படங்களை எடுத்து முடிக்காமல் நான் சினிமாவில் இருந்து விலகமாட்டேன்.சினி மாடிக் யுனிவர்ஸ்’ மிக விரைவில் திறக்கப் படும். லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படமும் ‘சினிமாடிக் யுனிவர்ஸ்’ யை சேர்ந்ததுதான். கூலி படத்துக்கு பிறகு ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கான கதையை இருவரிடமும் சொன்னேன். ஆனால், தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடிக்க இருவருக்கும் தயக்கம் இருந்தது. இதனால், அதிலிருந்து வெளியேறினேன். தற்போது நான் ஹீரோவாக டிசி படத்தில் நடித்து முடித்துள்ளேன். அதேபோல் ஜனநாயகன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும்படி விஜய் அண்ணா, வினோத் இருவரும் கேட்டுக் கொண்டதால் அதில் நடித்துள்ளேன். அமீர்கான் நடிக்கும் ஒரு படத்தை இயக்குவது குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறோம்’ என்றார்.