- மறுஆய்வு குழுவானது, விண்ணப்பித்த 20 நாளில் அமைக்கப்படும்;
ஜனநாயகன் திரைப்படம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இல்லாவிட்டால் படம் மறுஆய்வு செய்யப்பட்டிருக்கும், இக்குழு சான்று வழங்க மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்
– தணிக்கை வாரியம் வாதம்
2. வழக்கு விசாரணை தொடங்கியது.
ஒருவர் வாரியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், வாரியம் ஆய்வு செய்த பிறகு ஒப்புதல் அளிக்கும்.
அதன் பிறகுதான் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்
– சென்சார் போர்ட்டு தரப்பு வாதம்
சென்சார் சான்று வழங்க பின்பற்றப்படும் நடைமுறைகளை சினிமாட்டோகிராப் சட்ட விதிகளை மேற்கோள்காட்டி வாதம்.
3.”படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கவில்லை.
தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை.
வாரிய தலைவரின் உத்தரவு எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை, தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது.”
-தயாரிப்பு நிறுவனம்
4.படத்திற்கு எதிராக புகார் யாரிடம் கிடைத்தது ? – நீதிபதிகள் கேள்வி
மும்பையில் உள்ள சென்சார் போர்டு தலைவரிடம் புகார் கிடைத்தது; சான்றிதழ் கொடுக்கும் வரை புகார் கொடுத்து யார் என்பதை படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவிக்க கூடாது – சென்சார் போர்டு பதில்
5.சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது
– படத்தயாரிப்பு நிறுவனம் வாதம்
6.”சென்சார் போர்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விரிவான உத்தரவு எங்கே?
உத்தரவு இல்லாமல் எப்படி வழக்கு தொடர முடியும்?”
– நீதிபதிகள்
7.ஜனநாயகன் சென்சார் விவகாரம் – காரசார வாதம்
“அனைத்து நீதிமன்ற நடைமுறைகளையும் ஒரே நாளில் முடிக்க முடியாது
ஒரே நாளில் உத்தரவு பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது”– நீதிபதிகள்
“தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அன்றே வழக்கு தொடரந்தோம்
சென்சார் – வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது
ஏற்கனவே நீக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் நீக்க வேண்டும் என புகார்”
– பட தயாரிப்பு நிறுவனம்
8.”தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு”
ஜனநாயகன் வழக்கு: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு வழக்கு
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல்
ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
9.“இறுதி முடிவு எடுக்கவில்லை’’
“படத்தை 9ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது’’
“படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பும் முடிவை ரத்து செய்ய கோராத நிலையில், அதை ரத்து செய்ய முடியாது’’
“நாங்கள் பதிலளிக்க அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி ஒரே நாளில் முடிவெடுத்துள்ளார்’’
“இப்போதைக்கு ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து வாரிய தலைவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை’’
– ஜனநாயகன் விவகாரத்தில் சென்சார் தரப்பு வாதம்