திருமணத்துக்குப் பிறகு கீர்த்திக்கு அடிக்கும் ஜாக்பாட்
பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் முடிந்தால் பட வாய்ப்புகள் குறைந்து விடும். ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது தமிழ் ,தெலுங்கு, இந்தி, மற்றும் மலையாளம் ஆகிய மொழிப்படங்களில் பிஸியாகி உள்ளார். கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கு
விஜய் தேவரகொண்டா உடன் “ரவுடி ஜனார்தன்” படத்தில் நடிக்கிறார். மேலும் சமீபத்தில் “தோட்டம்” என்ற மற்றொரு படத்தை அறிவித்தார். அதோடு வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திலும், மற்றொரு பாலிவுட் படத்திலும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதன் மூலம் திருமணத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் புதிய படங்களில் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.