ஜாக்கி -விமர்சனம்

ஜாக்கி -விமர்சனம்
மதுரையில் உள்ள கிராமங்களில் கிடா சண்டை நடைபெறுவது வழக்கம். அதில் வெற்றி பெறும் கிடாவின் உரிமையாளருக்கு ஜாக்கி என்ற மெடல் வழங்கப்படும். இந்த போட்டியில் ஆண்டு தோறும் வெற்றி பெற்று மெடல் வாங்கிவரும் ரிதான் கிருஷ்ணாஸ் கிடாவுடன், ஷேர் ஆட்டோ ஓட்டுனரான யுவன் கிருஷ்ணாவின் கிடாவும் மோதுகிறது.இதில் யுவன் கிருஷ்ணாவின் கிடா வெற்றி பெற்று விடுகிறது. தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத ரிதான் கிருஷ்ணாஸ் செய்யும் சம்பவங்கள் தான் படத்தின் மீது கதை.
மதுரையின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை போல் கிடா சண்டையை வைத்து இந்த படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் பிரகபல். இருப்பினும் திரைக்கதையில் சுவாரசியம் குறைவாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை. கிடாவுடன் ஆக்ரோஷமாக ஈடு கொடுத்து நடித்துள்ள யுவன் கிருஷ்ணா நடிப்பு யதார்த்தமாக உள்ளது. வில்லனாக வரும் ரிதான் கிருஷ்ணாஸ் நடிப்பும் ஓகே. அம்மு அபிராமி,மதுசூதன ராவ் கொடுத்த வேலைக்கு செய்துள்ளனர்.சக்தி பாலாஜி இசை,என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

Comments (0)
Add Comment