அந்தப் படம் பிளாப் ஆகும் என முன்பே தெரியும்: ராஷி கன்னா
நடிகை ராஷி கன்னா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள தெலுங்கு படம் ‘உஸ்தாத் பகத் சிங்’.பவன் கல்யாண்,ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஷி கன்னா அளித்த பேட்டியில், “கடந்த ஆண்டு ரிலீசான ‘தெலுசு கடா’ படத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை படப்பிடிப்பின் போதே நான் கணித்துவிட்டேன். சில காட்சிகள் படமாக்கும் போது, இது சரியாக வராது என்பதை உணர்ந்தேன். ஆனாலும் படத்தின் இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து நடித்தேன்.படப்பிடிப்பில் திரைக்கதையை பல முறை மாற்றினார்கள். இதனால் அந்தப் படத்தின் மூலம் பாடம் கற்றுக் கொண்டோம் என்றார்.