பாஜக மீது ‘அய்யா ஓபிஎஸ்’ ஓவர் கோபத்தில் இருக்கிறாராமே?
எல்லாம் ஒருநாள் கூத்துதானே.. தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடியை எப்படியாவது சந்தித்து பேச வேண்டும் என்பதற்காக ரொம்பவே கெஞ்சிப் பார்த்தார் ஓபிஎஸ். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதனால் ஓபிஎஸ் கூடவே இருக்கிறவங்களும் செம்ம கடுப்பில் இருக்கிறாங்க.. இவங்களை கூல் செய்வதற்காக திடீரென மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார் ஓபிஎஸ். இதே கோபத்துடன் பிரஸ்மீட் நடத்தவும் இருக்கிறார் என தகவல் வெளியானது.
ஓபிஎஸ்-ன் கோபத்துக்கு திரியாக இருந்து விளக்கேற்றி வைத்து கொண்டிருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன், அப்படியே விஜய் பக்கம் அவரை தள்ளிக் கொண்டு போகலாம் என கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறார்.
இந்த கூத்துகளை எல்லாம் கவனித்த பாஜக தரப்பு, ஓபிஎஸ்ஸிடம் பேசி இருக்கிறது.. “ரொம்ப டென்ஷனாக வேண்டாம்.. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என சொல்ல, ஓபிஎஸ்-ம் உடனே கூல் ஆகி, “ஆஹா வெற்றி.. ஆஹா வெற்றி” என்கிறாராம்..!