ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்!

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தலைமைக் காவலர் அக்னிமுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மேற்கொண்டுள்ளார்.

⚖️ பெண்களின் பாதுகாப்பு மற்றும் காவல்துறையின் ஒழுக்கத்தை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்

Comments (0)
Add Comment