அண்ணாமலை கட்சியின் உறுப்பினர் கார்டு..
புதிய அரசியல் இயக்கம்
புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் 18 ஆண்டுகளாக புதியபாதையை உருவாக்க போராடி கொண்டிருக்கிறேன்
இயக்கம் தொடங்கி அரசியல் கட்சியாக்குவேன்
முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டு வந்து, பிறகு அரசியல் சொல்லிக்கொடுத்து
கட்சியாக மாற்றுவேன். நான் தொடங்கவுள்ள தனி இயக்கம் தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்
தேர்தலில் கட்சியாக போட்டியிடும்.சிறந்த மூளைகளை அரசியலுக்கு கொண்டுவருவேன்; அதற்கு சிறிதுகாலம் அவகாசம் தேவை. தமிழ்நாட்டின் அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும்
என்பதே விருப்பம். சமரசமில்லாத கொள்கை கொண்ட இயக்கமாக வழிநடத்துவதே என் இலக்கு
பாஜகவையும் எதிர்ப்பேன்..!
திமுக, அதிமுக, தவெக, நாதக, பாமகவை எப்படி பார்க்கிறேனோ, அப்படி தான் பாஜகவையும் பார்க்கிறேன்.பாஜகவை எதிா்க்க வேண்டிய நிலை வந்தால் எதிா்ப்பேன், கைப்பிடித்து இங்கு அழைத்து வந்த அனைவருக்கும் நன்றி.சமூக வலைதளத்தில் அரசியல் பேசுவோம், அவரவர் வழியில் அரசியல் எல்லோரும் செய்யட்டும்
“ரஜினிகாந்த் போன் செய்தார்”
“2020-ல் பாஜகவில் இணைவதற்கு ஒரு நாள் முன்பு ரஜினிகாந்த் எனக்கு போன் செய்தார். டெல்லியில் இருந்து திரும்பி, அவரது இயக்கத்தில் இணைய வேண்டும் என்று கேட்டார். ரஜினி அரசியலுக்கு வருவதுதான் நாட்டுக்கு நல்லது. ஆனால், அரசியலுக்கு வராமல் இருப்பதுதான் அவரது உடல்நலத்துக்கு நல்லது. நான் பாஜகவில் இணைவதாக வாக்கு கொடுத்துவிட்டேன். கட்சியில் இணையும் முன்பே என் முன்னால் மூன்று முரண்பாடான சூழல்கள் இருந்தன. அந்த நிலையில்தான் கட்சியில் இணைந்தேன்.”