பாலிவுட்டில் என்னை இழிவாக நடத்தினர்: நடிகை ரெஜினா குமுறல்

பாலிவுட்டில் என்னை இழிவாக நடத்தினர்: நடிகை ரெஜினா குமுறல்
‘கண்டநாள் முதல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. கடந்தாண்டு அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் வில்லி கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தமிழ்,தெலுங்கு, இந்தி உட்பட பல மொழி படங்களில் நடித்து வரும் அவர்,சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு இந்தியில் சரளமாக பேசத் தெரிந்தும் என் படங்களுக்கு நானே டப்பிங் பேசிய போதிலும் பாலிவுட் திரை உலகில் நான் ஒரு வெளியாள் போல் நடத்தப்பட்டேன்.நிறைய பேர் என்னை வார்த்தைகளால் மட்டுமின்றி செயல்களாலும் இழிவான முறையில் நடத்தினர் என கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment