சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ்

சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ்
அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இயக்கியுள்ள படம் ஓ பட்டர்ஃப்ளை.இதில் நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ளனர். ஆன்ட்ஹில் சினிமா நிறுவனம்,பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது.வரும் 6ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை நிவேதிதா சதீஷ் பேசியது,கேப்டன் மில்லர் படத்திற்காக மிகவும் கடின உழைப்பை கொடுத்தேன், கிட்டத்தட்ட 1 வருடம் அந்த படத்தில் பணியாற்றி நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் நான் எதிர்பார்த்த பலன் எனக்கு கிடைக்க வில்லை. அதனால் சினிமா நமக்கு சரிப்பட்டு வராது. சிறிது காலம் விலகி இருக்கலாம் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தான் ஓ பட்டர்ஃப்ளை படம் எனக்கு வந்தது. நான் இதுவரைக்கும் கேட்ட நரேஷன்களில் அது சிறப்பாக இருந்தது. இந்த படம் பண்ணலாம் என்று முடிவு எடுத்த பிறகு நிறைய ரிகர்சல் செய்தோம் என்றார்.

Comments (0)
Add Comment