என்னை ‘டேய் சிவாஜி’ என அழைக்கும் போது மகிழ்ச்சி: ரஜினி

என்னை ‘டேய் சிவாஜி’ என அழைக்கும் போது மகிழ்ச்சி: ரஜினி
1975-1979-ம் ஆண்டில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.இதில் காணொளி மூலம் நடிகர் ரஜினி பேசியது,பழைய நண்பர்களை பார்க்கும் போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தக் கல்லூரியில் படித்த நீங்கள் சுமார் 50 வருடத்திற்கு பிறகு சந்தித்திருக்கிறீர்கள். பெரியவராக வளர்ந்துள்ள பிறகு கணவன், அப்பா, தாத்தா, சார், மச்சான் என எப்படி மரியாதையாக அழைத்தாலும் நமது பழைய நண்பன் நம்மை பெயர் சொல்லி, ‘டேய்’ என அழைக்கும் போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் எவ்வளவு பிசியாக இருந்தாலும் 6 மாதத்திற்கு ஒரு முறை பெங்களூர் சென்று என்னுடன் பணியாற் றிய டிரைவர்,கண்டக்டர் நண்பர்களை சந்திப்பேன்.சிவாஜி என்ற என்னுடைய பெயரை நானே மறந்து விட்டேன் என் நண்பர்கள் என்னை ‘டேய் சிவாஜி’ என அழைக்கும் போது அந்த மகிழ்ச்சிக்கு சொல்ல வார்த்தைகளை இல்லை என்றார்.

Comments (0)
Add Comment