தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (13.06.26) சனிக்கிழமை,
சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில்,
முன்னாள் அமைச்சர் திரு.கே.டி. பச்சைமால், முன்னாள் எம்பி.திரு.நா.பாலகங்கா, முன்னாள் எம்பி திருமதி.R.வனரோஜா, முன்னாள் எம்பி திரு.இளவரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.S.விஜயதாரணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.முருகேசன் மற்றும் திமுக மற்றும் அதிமுக கட்சிகளை சேர்ந்த முன்னாள் மேயர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கவுன்சிலர்கள், இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மாநில, மாவட்ட, பகுதி, நகர, வட்ட,
ஒன்றிய மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.N.ஆனந்த் MLA அவர்கள் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
கழகத்தில் புதிதாக இணைந்த அனைவரையும் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.N.ஆனந்த் அவர்கள், மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு.A.ராஜ்மோகன் அவர்கள், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள்,
சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.அருள்பிரகாசம் அவர்கள், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.VS.பாபு அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.கருப்பையா அவர்கள், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. நவல்பட்டு விஜி அவர்கள், முன்னாள் அமைச்சர் திரு. வெல்லமண்டி நடராஜன் அவர்கள், தமிழக வெற்றிக் கழக துண்டை அணிவித்து அன்புடன் அனைவரையும் வரவேற்றனர்.