ஆரி அர்ஜுனன் நடிக்கும் “போர்த் ப்ளோர்”

ஆரி அர்ஜுனன் நடிக்கும் “போர்த் ப்ளோர்”
இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில்,நடிகர் ஆரி அர்ஜுனன் ஹீரோவாக நடித்துள்ள படம் “போர்த் ப்ளோர்”. மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.ராஜா தயாரிப்பில், வித்தியாசமான கதைகளத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள இதில் தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, தரண் இசையமைத்துள் ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்து முடிந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இசை மற்றும் டிரெய்லர் வெளியாக உள்ளது. இப்படத்தை செவன்த் ஸ்டுடியோ சார்பாக கே.கண்ணன் தமிழ்நாடு தியேட்டர் வெளியீடு செய்கிறார். இப்படம் வரும் பிப்ரவரி மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

Comments (0)
Add Comment