வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, அரசு நில ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான இரு தனித்தனி ஊழல் வழக்குகளில் தலா 5 ஆண்டுகள் வீதம், மொத்தம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்குகளில் அவரது குடும்பத்தினருக்கும் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.