“ஏன் தெரியுமா..?’’

“ஏன் தெரியுமா..?’’

“நாம அரசியலுக்கு வந்ததும், கடவுள் நம்பிக்கை உண்டுனு அறிவிச்சது ஏன் தெரியுமா? உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்த விதைக்கும். மத்தவங்க நம்பிக்கைய மதிக்க கத்து கொடுக்கும்”

* தவெக தலைவர் விஜய்

த.வெ.க.தலைவர் சோசப் விசய் மகாபலிபுரம் நட்சத்திர விடுதியில் நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் பலத் தரப்பட்ட மத போதகர்கள் விஜய்யை வானளாவ புகழ்ந்து பேசினார்கள்.

அவர்கள் எல்லாம், மார் 1 1/2 மணி நேரம் பேசிய நிலையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடத்திய சோசப் விசய் 5 நிமிடம் மட்டுமே பேசினார். அங்கு கூடியிருந்த அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை சொன்ன அவர், வந்திருந்த அனைவரும் சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டு தனது பேச்சை சுருக்கமாக முடித்தார்.

ஆக த.வெ.க. எனும் அரசியல் சினிமாவின் இன்றைய படபிடிப்பில் 5 நிமிடம் டயலாக் பேசி நடித்து முடித்தார்.

Comments (0)
Add Comment