மன்னிப்பு கேட்ட அன்னராஜன்

மன்னிப்பு கேட்ட அன்னராஜன்
மலையாள நடிகை அன்னாராஜன். சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில்
ஆற்றுக்கல் பொங்கல் விழாவில் பங்கேற்று பொங்கலிட்டார். அப்போது அவரை பல்வேறு கோணங்களில் படமெடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். இதனால் அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அன்னராஜன் மன்னிப்பு கேட்டு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘நான் முதன் முதலாக இந்த ஆண்டு தான் அம்மாவின் காலடியில் பொங்கல் வைத்தேன். புனிதமான தருணத்தில் தேவையற்ற சில வீடியோக்கள் பகிரப்பட்ட தை பார்ப்பது மிகவும் வேதனையாக இருந்தது. என் பக்தியை பலவீனப்படுத்தும் வகையில் என் தோற்றங்கள் வெளியானது. எனது சேலை முக பாவங்கள் ஏதேனும் பக்தர்கள் மனதில் தேவையற்ற வலியை ஏற்படுத்தி இருந்தால் நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Comments (0)
Add Comment