ஐஸ்வர்யா லட்சுமிக்கு சிக்கலான கேரக்டர் தான் பிடிக்குமாம்

ஐஸ்வர்யா லட்சுமிக்கு சிக்கலான கேரக்டர் தான் பிடிக்குமாம்
பிரபல நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தற்போது கட்டா குஸ்தி 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்,தெலுங்கு சினிமா ஒரு மிகப் பெரிய வணிக மையமாக மாறி உள்ளது. அங்கு நான் ஒரு கமர்சியல் ஹீரோயின் ஆக பார்க்கப்படுகிறேன். பெமினிசம் பேசும் கேரக்டர்களில் நடிப்பது ஒரு நடிகையின் விருப்பம். அந்த வகையில் அம்மு படத்தில் என்னை நடிக்க வேண்டாம் என பலர் சொன்னார்கள். ஏனெனில் அது குடும்ப வன்முறையை பற்றிய கேரக்டர். அதேபோல் கட்டா குஸ்தி படத்திலும் நடிக்க வேண்டாம் என்று கூறினார்கள் இருப்பினும் இந்த இரண்டு படங்களும் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. எப்போதும் எனக்கு சிக்கலான கதாபாத்திரங்களில் நடிப்பது பிடிக்கும் என்றார்.

Comments (0)
Add Comment