2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் தேர்தல்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரையின் போது பயன்படுத்தும் பொருட்களுக்கான அதிகாரப்பூர்வ விலை நிர்ணயப் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பரப்புரைக்குத் தேவையான பல்வேறு பொருட்கள் இடம்பெற்றிருந்தாலும், தமிழகத் தேர்தல் களத்தில் தவிர்க்க முடியாத உணவுகளான சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி மற்றும் முழுச் சாப்பாடு (Full Meals) போன்ற விவரங்கள் இடம்பெறாதது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது; தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள தொகையை அடிப்படையாகக் கொண்டே வேட்பாளர்களின் செலவுக் கணக்குகள் கணக்கிடப்படும் என்பதால், பட்டியலில் விடுபட்டுள்ள இந்த உணவுப் பொருட்களுக்கான செலவை எவ்வாறு கணக்கில் காட்டுவது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். களத்தில் தொண்டர்களுக்கு வழங்கப்படும் பிரதான உணவுகள் பட்டியலில் இல்லாதது தேர்தல் செலவுக் கணக்குகளைத் தயாரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

Comments (0)
Add Comment