ஆழி -விமர்சனம்
மீனவர் பகுதியில் செல்வாக்கு மிக்க தாதாவாக வாழும் சரத்குமார், தனது ஒரே மகள் தேவிகா சதீஷை மிகுந்த பாசமாக வளர்க்கிறார்.கல்லூரியில் படிக்கும் அவர்,சக மாணவன் இந்திரஜித்தை காதலிக்கிறார். இந்த விஷயம் அப்பா சரத்குமாருக்கு தெரியவர, இந்திரஜித்தை மீன்பிடி படகில் நடுக்கடலுக்கு கடத்திச் செல்கிறார்.அங்கு நடக்கும் இரண்டு விதமான போராட்டம் தான் படத்தின் மீதி கதை.இறுக்கமான முகத்துடன் தாதா கேரக்டரில் மிரட்டி உள்ள சரத்குமார் இறுதிக் காட்சியில் பாசத்தைக் காட்டி கண்ணீர் வரவழைக்கிறார். செகண்ட் ஹீரோவாக நடித்துள்ள இந்திரஜித் அளவான நடிப்பை கொடுத்துள்ளார். தேவிகா சதீஷ் நடிப்பு ஓகே. மீனவர் சமூகத்தின் பின்னணியில்,அப்பாவின் பாசமும் காதலின் பிடிவாதமும் மோதும் தருணங்களை மையமாக வைத்து ஆழி கதையை உருவாகியிருக்கிறார் டைரக்டர் மாதவன்.ஆனந்த் நாயாரின் ஒளிப்பதிவு, ஜாஸி கிப்ட் பாடல்கள், வில்லியம் பிரான்சிஸ் பின்னணி இசை ஓகே ரகம்.