தபுவுடன் நெருக்கமாக நடித்த இளம் ஹீரோ
பாலிவுட் நடிகை தபு தற்போது ‘எ சூட்டபிள் பாய்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் 53 வயதான தபுவுடன் காதல் காட்சிகளில் நெருக்கமாக 29 வயது ஹீரோவான இஷான் கட்டர் நடித்துள்ளார். இந்த காட்சிகள் வெளியாகி திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தபுவுடன் நடித்துள்ள இஷான் இதுகுறித்து கூறுகையில், தபு என்னை விட 24 வயது மூத்தவராக இருந்தாலும்,எங்களுக்கு இடையே உள்ள வயது வித்தியாசம் எந்த வகையிலும் என்னை பாதிக்கவில்லை. இது போன்ற காட்சிகள் பார்வையாளர்களுக்கு
விசித்திரமாக தோன்றலாம். ஆனால் கதை எழுதப்பட்ட விஷயத்தை பார்க்கும் போது நாங்கள் வயது வித்தியாசம் பற்றி யோசிக்க முடியவில்லை. அவருடன் நடித்தது எனக்கு
சவுகரியமாக இருந்ததாக கூறியுள்ளார்.