காந்தா வாழ்வில் ஒருமுறை மட்டுமே அமையும் சினிமா: துல்கர் சல்மான்

 

 

காந்தா வாழ்வில் ஒருமுறை மட்டுமே அமையும் சினிமா: துல்கர் சல்மான்
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்துள்ள படம் “காந்தா”. இதில் ஹீரோயினாக பாக்கியஸ்ரீ நடித்துள்ளார். இந்தப் படம் மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதது. வரும் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இதில் துல்கர் சல்மான் பேசியது, “காந்தா திரைப்படம் இதனுடன் தொடர்புடைய அனைவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே அமையும் சினிமா. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினோம் என நினைக்கிறேன். எனக்கு தமிழ் அவ்வளவு பிடிக்கும். நம் சினிமா கோடம்பாக்கத்திலிருந்துதான் மற்ற மாநிலங்களுக்குச் சென்றது. இப்படத்தில் அந்தக்கால சினிமா ஸ்டூடியோ கலாசாரங்க ளையும் அதன் கதைகளையும் அழகாக பதிவு செய்திருக்கிறோம். அதை நீங்கள் ரசிப்பீர்கள்” என்றார்.

Comments (0)
Add Comment