மீண்டும் தள்ளிப்போன யாஷின் டாக்ஸிக்

மீண்டும் தள்ளிப்போன யாஷின் டாக்ஸிக்
கீத்துமோகன்தாஸ் இயக்கத்தின் யாஷ் நடிப்பில் அதிக பொருட் செலவில் உருவாகியுள்ள படம் டாக்ஸிக்.ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியு ள்ள இந்த படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்தது. ஈரான்-அமெரிக்கா போர் பதட்டம் காரணமாக டாக்ஸிக் படத்தின் வெளியீட்டு தேதி ஜூன் 4-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது படத்தில் வியாபாரம் முடியாததால் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் மற்றும் நடிகர் யாஷ் கூறியது, டாக்ஸிக் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து உலகளாவிய விநியோகம் மற்றும் வியாபாரம் பேசி வருகிறோம்.இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஜூன் 4-ந் தேதி டாக்ஸிக் படம் ரிலீஸ் ஆகாது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.

Comments (0)
Add Comment