தெலுங்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பாரா நயன்தாரா?
மகரசங்கராந்தி பண்டிகையையொட்டி தெலுங்கு திரை உலகில் பல முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது. ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் ராஜாசாப் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் சிரஞ்சீவி நடிப்பில் மன சங்கர வர பிரசாத் காரு என்ற படமும் ரிலீஸ் ஆகிறது. இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கு திரை உலகிற்கு சென்றுள்ளார் நயன்தாரா. அங்கு அவர் மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பது பட வெளியீட்டுக்கு பிறகு தெரியவரும். அதோடு பாலையா நடிக்க உள்ள புதிய படத்திலும் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.