அருள்வான் படத்தில் நடித்தது ஏன்?அருள்நிதி தகவல்

அருள்வான் படத்தில் நடித்தது ஏன்?அருள்நிதி தகவல்
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ் ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்துள்ள படம் ‘அருள்வான்’. இதில் ஆரவ் , ரம்யா பாண்டியன்,கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜி .வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். வரும் 17ம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். இதை ஒட்டி நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் அருள்நிதி பேசியது,”இந்தப் படத்தின் கதையை கேட்ட பிறகு நான் முழு நீள படத்தில் நடித்திருந்தாலும் இது போன்றதொரு கதாபாத்திரத்தை என்னால் ஏற்று நடித்திருக்க முடியுமா? என தெரியாது. இதில் முத்துவேல் என்ற மாவட்ட கலெக்டர் கேரக்டரில் நடித்திருக்கிறேன். பெண் குழந்தைகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து இந்த படம் பேசுகிறது என்றார்.

Comments (0)
Add Comment