சூர்யா 47வது படத்தின் ஷூட்டிங் ஓவர்

சூர்யா 47வது படத்தின் ஷூட்டிங் ஓவர்
கருப்பு படத்தின் வெற்றிக்குப் பிறகு, தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் நடித்து வந்தார்.இதில் நஸ்ரியா ஹீரோயினாக நடிக்கிறார். பிரேமலு புகழ் நஸ்லென் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சுஷின் ஷியாம் இசையமைக்கிறார். ஜித்து மாதவன் மற்றும் ஜோதிகாவின் ழகரம் ஸ்டுடியோஸ் சேர்ந்து தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை விரைவில் வெளியாக உள்ளது .

Comments (0)
Add Comment