“செந்தில் பாலாஜியை தவிர யார் யார் சம்மந்தப்பட்டுள்ளனர்?”

“செந்தில் பாலாஜியை தவிர
யார் யார் சம்மந்தப்பட்டுள்ளனர்?”

உச்சநீதிமன்றம் நறுக்
கேள்விகள்…

போக்குவரத்து துறையில் வேலைக்கு பணம் பெற்ற விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது

போக்குவரத்துத் துறையில் வேளைக்கு லஞ்சம் பெற்ற விவகாரத்தில் செந்தில் பாலாஜியை தவிர, இடைத்தரகர்கள், தரகர்கள் யார் யார் சம்மந்தப்பட்டுள்ளனர்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

பணம் பெற்றுக்கொண்டு நியமன ஆணை வழங்கிய அதிகாரிகள் யார்? என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

ஒவ்வொரு வழக்கிலும் 900,1000 பேர் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் எண்ணிக்கை இருந்தால், வழக்கு விசாரணை எப்போது முடிவடையும்? இப்படியே போனால், எத்தனை ஆண்டுகளானாலும் இந்த வழக்கு முடியப்போவதில்லை? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

லஞ்சம் கொடுத்தவர்கள் என்று அழைக்கப்படும் ஏழைகளையும், குற்றம்சாட்டப்பட்ட 2000 முதல் 2500 பேரையும் விசாரணை செய்வது கடினம். 2000 முதல் 2500 பேரையும் விசாரணை செய்தால், அமைச்சரின் வாழ்நாள் முழுவதும் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வராது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

குற்றம்சாட்டப்பட்ட மேற்கூறிய நபர்களை சிக்க வைப்பதே உங்கள் முயற்சியாக உள்ளது. இது System மீதான ஒரு மோசடி என நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்

Comments (0)
Add Comment