ஒரே நேரத்தில் 2 படத்தில் விஷால்
நடிகர் விஷால் தற்போது மகுடம் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் துஷாரா விஜயன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தில் கடைசி கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி சவுத்ரி தயாரிக்கிறார். அதேபோல் சுந்தர் சி மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் புருஷன் படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். சுந்தர் சி இயக்கம் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். தேர்தலுக்கு முன்பு வரை இந்த படத்தின் படப்பிடிப்பும் நடந்தது. இந்த ரெண்டு படத்திலும் மாறி மாறி விஷால் உத்வேகத்துடன் நடித்துக் கொடுத்துள்ளார்.