தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேச்சு..

அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறமும் சரி, அதிகாரத்திற்கு வந்ததற்கு அப்புறமும் சரி, இதுக்கு முன்னாடி இருந்தவங்க மாதிரியோ, இப்ப இருக்கிறவங்க மாதிரியோ ஊழல் செய்யவே மாட்டேன்… ஒரு பைசா தொட மாட்டேன்; எனக்கு அது அவசியமும் இல்லை; ஒரு துளி ஊழல் கறை கூட படியவே படியாது.

இது என்ன சினிமாவா, முதல்வன் படத்தில் வருகிற மாதிரி ஒரே நாளில் எல்லாவற்றையும் க்ளீன் பண்ணிடுவீங்களானு கேட்கலாம்; நடைமுறையில் அது சாத்தியம் இல்லைதான்… ஆனால் அது தொடர் பணி.

எதுக்குமே ஆசைப்படாத நான் என் கண் முன்னாடி ஊழல் ஏதாச்சும் நடந்தா பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பேன்?
தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேச்சு..
விஜய் சொன்ன குட்டி கதை..
“. சொந்தநாட்டிலே இருக்க முடியாத சூழல் வேலுநாச்சியாருக்கு வந்தது; அப்பொழுது நாட்டைவிட்டு வெளியேறி தலைமறைவானார்.

பின்னர் சின்ன மருது, பெரிய மருது, சைய்யது கார்கி ஆகிய நட்பு சக்திகளுடன் பெரிய படை திரட்டி ஆங்கிலேய படைகளுக்கு எதிராக போர் புரிந்து நாட்டை மீட்டார் வேலுநாச்சியார்.

அதுபோல், நம்முடைய தவெக படை நட்பு சக்தி இருந்தாலும், இல்லையென்றாலும் தனியாவும் நின்னு கெத்தா ஜெயிக்கிற அளவிற்கு மிகப்பெரிய படை.

மக்களுக்கு என் மேல் மட்டும் நம்பிக்கை இருந்தா பத்தாது; என்னோடு பயணிக்கிற எல்லோருடனும் நம்பிக்கை வரணும். தயவு செய்து கொஞ்சம் எல்லாரும் ஒற்றுமையாக இருந்து உழைத்து ஜெயிக்கணும்.”

– கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடவும் தயார் என்பதை வேலுநாச்சியார் கதையை சொல்லி தவெக தலைவர் விஜய் பேச்சு.

ஒருதுளி ஊழல்கூட படியவே படியாது. படியவும் விடமாட்டேன்.
” தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேச்சு

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தவெக யாருடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை எந்த கூட்டணியிலும் சேரப் போவதும் இல்லை.

அதேபோல தங்களுடனும் யாரும் கூட்டணி அமைக்கப் போவதில்லை.

தேர்தலை தனியாகவே சந்திக்க போகிறோம் என்பதை தொண்டர்களுக்கு கூறுவதாகவே விஜயின் இன்றைய பேச்சு அமைந்திருந்தது.

Comments (0)
Add Comment